Skip to content

நடிகர் பிரபாஸ்-க்கு திருமணம்…வதந்தி என விளக்கம்…!

நடிகர் பிரபாஸ்-க்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது வெறும் வதந்தி என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். பிரபாஸ் தற்போது ‘தி ராஜா சாப்”, ’கண்ணப்பா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். 45 வயதை கடந்த இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும்நிலையில், திருமணம் பற்றிய பல வதந்திகள் தொடர்ந்து பரவிக்கொண்டு இருக்கின்றன.

 சமீபத்தில், ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபரின் மகளை நடிகர் பிரபாஸ் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகத கூறப்பட்டது. இவ்வாறு தொடர்ந்து, பிரபாசின் திருமணம் குறித்து வதந்திகள் பரவி வரும்நிலையில், பிரபாஸின் குழு இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. அதன்படி, இது போலியான செய்தி என்றும் அதனை தயவுசெய்து யாரும் நம்ப வேண்டாம் எனவும் குழு தெரிவித்திருப்பதாக தெரிகிறது.
error: Content is protected !!