இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார். இப்படத்தில்பிரதான பாத்திரத்தில் நடிகர் பாண்டியராஜனின் மகனானபிரித்வி ராஜன் நடித்திருந்தார். இந்த நிலையில் , இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் பிரித்வி, படப்பிடிப்பு தளத்தில் தனது தந்தை பாண்டியராஜனுடன்எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, “மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்” என்ற திருக்குறளைப் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.