Skip to content

நேபாளத்தில் அஜித்துடன் செல்பி எடுத்த ரசிகர்…. வீடியோ…

  • by Authour

நடிகர் அஜித்திற்கு பைக்கில் உலக சுற்றுலா செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது. அந்தக் கனவு தற்போது படிப்படியாக நனவாகி வருகிறது. இந்த உலக சுற்றுலா பயணத்தை இந்தியாவில் இருந்து தொடங்கிய அஜித், இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் பைக்கிலேயே சுற்றி வந்தார். இந்தியாவில் வெற்றிகரமாக தனது பயணத்தை முடித்த அஜித் அடுத்ததாக உலக சுற்றுலாவுக்காக தயாராகி வந்தார்.

அஜித்துக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். அதில் நேபாளம் மட்டும் விதிவிலக்கா என்ன, அவர் அங்கு செல்லும் இடமெல்லாம் இவரை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு அவருடன் செல்பி எடுத்து அதன் புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். இதேபோல்

 

அஜித் பைக் ரைடிங் செய்யும் வீடியோக்களும் சோசியல் மீடியாவில் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்தநிலையில் நேபாளத்தில் சென்றுள்ள நடிகர் அஜித் அவருடன் செல்பி வீடியோ எடுத்து மகிழ்ந்த ரசிகர் தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் என கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!