Skip to content

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய யூடியூபர் இர்ஃபானுக்கு அபராதம்!….

யூடியூபர் இர்பான் உணவுகளை சாப்பிட்டு விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டு இணையத்தில் பிரபலமானவர். உள்ளூர் முதல் வெளிநாடு வரை சென்று புட் ரிவ்யூ செய்து வரும் இர்பான் சமீபத்தில் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில் அண்மையில் இர்பான் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிய வீடியோ இணையத்தில் வெளியானது. இதனை கண்ட நெட்டிசன்கள் நடிகர் பிரசாந்த் மீது பாய்ந்த சட்ட ஒழுங்கு ஏன் பிரபல  யூடியூபர் இர்பான் மீது பாய தயக்கம் காட்டுகிறது? இது ஒருப்பக்க நீதியத்தான குறிக்கிறது..? யாரா இருந்தாலும் சட்ட ஒழுங்க கடைப்பிடிக்க வேண்டும்… எனக் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது, முறையான நம்பர் பிளேட் இல்லாதது ஆகியவற்றிற்காக யூடியூபர் இர்ஃபானுக்கு ரூ.1,5000 அபராதம் விதித்து சென்னை போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக ரூ.1,000 மற்றும் வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாததால் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!