ஜார்கண்ட் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலின் இறுதிக்கட்டப் பிரசாரத்துக்கு வருகை தந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2-ம் கட்ட சட்டசபை தேர்தல் நவம்பர் 20-ம் தேதி நடைபெறுகிறது. எனவே, இதனைமுன்னிட்டு பிரதமர் மோடியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சூழலில், பிரச்சாரத்தை முடித்து கொண்டு கிளம்பும்போது பிரதமர் நிகழ்ச்சி காரணமாக ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி அவருக்கு வழங்கப்படவில்லை. எனவே, இதன் காரணமாக அவர் கோடாவில் 1 மணி நேரம் காத்திருந்துள்ளார்.
பிரதமர் மோடி தியோகரில் பிரச்சாரத்தில் இருப்பதால், ராகுல் காந்தி அந்தப் பகுதியைக் கடக்க அனுமதிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.ஒரு மணி நேரத்துக்குப் பிறகு விமானக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் இருந்து உரிய அனுமதி கிடைத்ததால், ஹெலிகாப்டரில் ராகுல் காந்தி புறப்பட்டு சென்றார்.
மேலும், ஜார்கண்டில் நடைபெறவுள்ள இந்த தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 14-ம் தேதி மாநிலத்தின் 81 தொகுதிகளில் 43 தொகுதிகளுக்கு நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் வரும் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.