கரூர் மாவட்டத்தில் கரூர், மண்மங்கலம், அரவக்குறிச்சி குளித்தலை, இலாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம், புலியூர், காந்திகிராமம், ஆகிய பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்றது. வழக்கத்திற்கு மாறாக இருக்கும் இந்த கடும் பனிப்பொழிவால் இருசக்கர வாகன பயணிகள் மற்றும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் மின்விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்குகின்றனர். ஏற்கனவே சுமார் 80 கி மீட்டர் தூரத்தினை 2 மணி நேரத்தில் பயணிக்கும் பேருந்து இந்த பனியால் சுமார் 10 முதல் 20 நிமிடம் தாமதமாகின்றது. ரயில்வே நிலையங்களிலும் பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்தது உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு…. சாலைகள் – ரயில் நிலையங்களில் பனிப்பொழிவு.
- by Authour
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2025/02/pani.jpg)