அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில், இன்று காலையில் அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் கடும் பணிப்படைவு நிலவியது. காலை 7 மணியளவிலும் தொடர்ந்த பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.
மலை பிரதேசத்தில் இருந்தது போல் காட்சிகள் காணப்பட்டது. வாகன ஓட்டிகள் காலை நேரத்திலும் தங்களது வாகன
விளக்குகளை எரிய விட்டு சென்றனர். எதிரே வருபவர்களை அடையாளம் காண முடியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு நிலவியது. மேலும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டு பாதுகாப்பாக பயணத்தை மேற்கொண்டனர். பனிப்பொழிவு இதமான சூழ்நிலையை ஏற்படுத்தினாலும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிக்கு உள்ளாகினர்.