அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பனியின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நேற்று இரவு முதலே பனியின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்தது. இன்று காலை பனிப்பொழிவு சாலை தெரியாத அளவிற்கு அதிக அளவில் இருந்ததால், சாலையில் செல்லக் கூடிய வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு எரிய விட்டவாறு சென்றனர். மேலும் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தின் கோபுரமும் பனியால் சூழப்பட்டு காணப்பட்டது. இதனால் கோயிலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் பனி சூழ்ந்த கோபுரத்தையே பார்த்து வியந்து சென்றனர்