மார்கழி மாதம் துவங்குவதற்கு முன்பாகவே கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மலையின் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகின்றன இந்த நிலையில் ஒரு சில மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவால்
வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு இரவு நேரத்தில் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் மார்கழி மாதம் துவங்குவதற்கு முன்பாகவே கரூர் மாநகர் மற்றும் வாங்கல், வெங்கமேடு ,மண்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் பனிமூட்டம் அதிகம் இருப்பதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
வழக்கமாக மார்கழி மாதத்தில் தான் அதிகப்படியான பனிப்பொழிவு காணப்படும். ஆனால், மாறாக கார்த்திகை மாதத்திலேயே அதிகமான பனிப்பொழிவு காணப்பட்டதால் உதகை மற்றும் கொடைக்கானல் பகுதியில் இருப்பதை போன்ற காலநிலையை பொதுமக்கள் உணர்ந்தனர்.