சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.
சென்னையில் திடீர் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 25க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சென்னை விமான நிலையத்தில் கடுமையான பனிமூட்டம் காரணமாக, 6 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூர், திருவனந்தபுரம், ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன.சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்படுகிறது.
இது போல திருச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பனிமூட்டம் காணப்பட்டது. காலை 8 மணி வரை காவிரி ஆற்று பகுதிகளில் பனி படர்ந்து இருந்தது. இதனால் காவிரி ஆற்றையே பார்க்க முடியவில்லை. வாகன ஓட்டிகளும் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர்.