Skip to content
Home » இன்று 14- நாளை 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

இன்று 14- நாளை 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள  அறிக்கை.. மன்னார் வளைகுடா, குமரிக்கடல், இலங்கை கடலோர பகுதிகளில், கடந்த சில நாட்களாக நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தற்போது, குமரிக்கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதியில் மட்டும் காணப்படுகிறது. இது, கிழக்கில் இருந்து வீசும் காற்றின் தாக்கத்தால், மேற்கு நோக்கி அரபிக்கடலுக்கு நகர வாய்ப்புள்ளது. இதே சமயத்தில், கேரள கடலோர பகுதியில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இந்த சுழற்சி லட்சத்தீவு, மாலத்தீவு இடையே செல்ல வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள், கேரள பகுதிகளில் கனமழை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான இடங்கள், புதுச்சேரியில் ஒருசில இடங்களில், இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கோவை ஆகிய, 14 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலுார், விழுப்புரம், அரியலுார், பெரம்பலுார், ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதைத் தொடர்ந்து, ஆக., 17, 18லும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், மிதமான மழையும் தொடர வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!