மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நேற்று ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது மேலும் வலுப்பெற்று ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்புள்ளது. மேலும், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் வாய்ப்புள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதன் காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. அத்துடன், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் வாய்ப்புள்ளதால் அந்த மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 24ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.