வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று (நவ.29) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலுார், தஞ்சாவூர் மாவட்டங்களில் இன்று, 12 செ.மீ.,க்கு மேல் மிக கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்ச் அலெர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில், 11 செ.மீ., வரை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.,29) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்றிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பல்வேறு இடங்களில் இடைவிடாமல் மழை பெய்து வருவதால், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.,29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை விடப்படுவதாக கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
தொடர் மழை.. செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை
- by Authour
