சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை.. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று(அக்.,21) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கரூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 21 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், நாளை(அக்.,22), நாளை மறுதினம் (அக்.,23) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சி ஆகிய 9 மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அக்.,23ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.