வங்க கடலில் மன்னார் வளைகுடாவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இது புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றபோதிலும் இன்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசிக்கு ரெட் அலர்ட் எச்சாிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதிகனமழை என்பது 20 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்வதை குறிக்கும்.
சென்னை, திருச்சி, கரூர் செங்கல்பட்டு, காஞ்சிவுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் நாகை, மயி, தஞ்சை, புதுக்கோட்டை தேனி, சிவகங்கை, மதுரை, கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் உள்பட 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மாலைக்கு பிறகு மழை குறையத் தொடங்கும். இந்த தகவலை சென்னை வானிலை ஆயவு மையம் தெரிவித்து உள்ளது.