மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் சுற்றுவட்டாரத்தில் நேற்று விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சீர்காழியில் தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக 24 செ.மீ. மழை பெய்தது. இதனால் சீர்காழி பகுதி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இன்று காலையிலும் விட்டு விட்டு மைழ பெய்தது. இதனால் காரணமாக சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள தையல்நாயகி சமதே வைத்தியநாத சுவாமி கோயில் வளாகத்தில் மழை நீர் 1 அடி உயரத்திற்கு தேங்கியது.
இந்த கோயில் நவக்கிர தலங்களில் செவ்வாய் தலமாக விளங்குகிறது. இன்று காலை கோயிலுக்கு வந்த பக்தர்கள் மழை நீரில் சென்றபடி சாமியை வழிபட்டனர்.