அரியலூர் மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1083 மில்லிமீட்டர் மழை பதிவான நிலையில், ஆங்காங்கே சாலைகளிள் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தெருக்கள் மற்றும் வீடுகளை சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் செந்துறை அருகே ஆலத்தியூர் பகுதியில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரால் ஆங்காங்கே தெருக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில்
மழைநீர் தேங்கியுள்ளது. தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இப்பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வையிட்டு, உரிய நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து தேங்கியுள்ள நீரை அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுரித்தி வருகிறார். மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் அதிகாரிகள் கவனம் மேற்கொண்டு, பொதுமக்கள் பாதிக்காத வகையில் பணிகளை துரிதப்படுத்தவும், அதிகாரிகளுக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தினார்.