தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் மே 16 முதல் 20ம் தேதி வரை பெய்த கனமழை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடலூர், குமரி மாவட்டங்களில் மின்னல் தாக்கியும், வெள்ளம் காரணமாகவும் இருவர் உயிரிழந்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 12 கால்நடை இறந்துள்ளன; 24 குடிசைகள்,வீடுகள் சேதம் அடைந்துள்ளன.