சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் காலை முதல் சென்னையில் விட்டு விட்டு அனைத்து இடங்களிலும் மழை கொட்டுகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் இன்றைக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட்டால் அடுத்த 24 மணி நேரத்தில் 20 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்யக் கூடும். பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இப்போது சென்னையின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நாளைக்கும் இந்த மாவடடங்களுக்கு ரெலட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.