தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று காலை வெயில் தாக்கம் இருந்த நிலையில் மாலை 3 மணி முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்து. சிறிது நேரத்தில் க. பரமத்தி, தென்னிலை, அணைப்பாளையம், சின்னதாராபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.
கன மழை காரணமாக தாழ்வான பகுதியில் உள்ள கடைகளில் வெள்ள நீர் புகுந்தது இதனால் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.