சென்னை நகரம் இன்று காலையிலேயே தீபாவளி களைகட்டியது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடைவீதிகளில் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு குடும்பம், குடும்பமாக கடைவீதிகளில் காணப்பட்டது. குறிப்பாக தி. நகர் வீதிகளில் வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. திடீரென மதியம் மழை கொட்டத் தொடங்கியது.
அண்ணாநகர், அமைந்தகரை, பெரம்பூர், வில்லிவாக்கம் . எழும்பூர், சேத்துப்பட்டு என பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. இதனால் கடைவீதிகளுக்கு வந்த மக்கள் கலைந்து செல்லத் தொடங்கினர். அண்ணாநகரில் ஒரு மணி நேரத்தில் 9 செ.மீ, அமைந்தகரையில் 7 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. இதுபோல மற்ற பகுதிகளிலும் கனமழை பெய்கிறது. இதனால் தீபாவளி பர்சேஸ்க்கு வந்த மக்கள் பாதிக்கப்பட்டனர். தரைக்கடை வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர். இந்த மழை மேலும்2 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.