Skip to content
Home » தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு…

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு…

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஏப். 29-ம் தேதி (இன்று) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நாளை (ஏப். 30), மே 1, 2-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக  ஏப். 29, 30 தேதிகளில் நீலகிரி, ஈரோடு, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.மே 1-ம் தேதி நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கரூர் மாவட்டங்களிலும். மே 2-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி,விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!