Skip to content
Home » 4 நாட்களுக்கு கனமழை எங்கெங்கே? ..

4 நாட்களுக்கு கனமழை எங்கெங்கே? ..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை..

 

16ம் தேதி..ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, சிவகங்கை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூா், தஞ்சாவூா், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகா் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

17ம் தேதி… கடலூா், மயிலாடுதுறை, திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகை மாவட்டங்கள் மற்றும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், விழுப்புரம், தென்காசி, விருதுநகா், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

18 ம் தேதி… கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்

19ம் தேதி.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!