தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று முதல் வருகிற 13-ந்தேதி வரை ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இந்நிலையில் இன்று திருச்சி, தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, விருதுநகர் ஆகிய 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.