சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை… ஏப்.23 ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்.24ம் தேதி முதல் 26ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டியே வெப்பநிலை பதிவாகும். உள் மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.