தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமடைந்துள்ளது. ஒவ்வொரு நாளும், 10க்கும் மேற்பட்ட இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகிறது. பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை காலை 7 மணிக்கு துவங்கி12 மணி வரையிலும் மீண்டும் மாலை 5 மணிக்கு துவங்கி இரவு 10 மணிவரை என நண்பகல் வெயிலை தவிர்க்க வேட்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். நேற்று மாலை நிலவரப்படி, மாநிலம் முழுதும், 14 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மாநிலத்தில் அதிகபட்சமாக, ஈரோடு, சேலத்தில், 42 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை நிலவியது. மீனம்பாக்கம், 38; கோவை, பாளையங்கோட்டை, தஞ்சாவூர், 39; நாமக்கல், திருத்தணி, வேலுார், 40; தர்மபுரி, மதுரை, கரூர் பரமத்தி, திருப்பத்துார், திருச்சி, 41 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. கொடைக்கானல், 22; ஊட்டி, 27; வால்பாறை, 30; துாத்துக்குடி, 34; நுங்கம்பாக்கம், காரைக்கால், நாகை, 35; கன்னியாகுமரி, புதுச்சேரி, 36 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
தமிழகத்தில் 14 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது..
- by Authour