கோடை கால பாதிப்புகள் தென்மாநிலங்களில் குறைய ஆரம்பித்துள்ள நிலையில் வட மாநிலங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக டில்லி, உத்தரபிரதேசம், ஹரியானா, உத்தரகண்ட், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
கடந்த மார்ச் 1ம் தேதி முதல் ஜூன் 18ம் தேதி வரையிலான காலகட்டத்தில், வெப்ப அலையின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து பீகார், ராஜஸ்தான் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதிக உயிரிழப்புகள் பதிவாகி உள்ளது.