Skip to content
Home » இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்…. வானிலை ஆய்வு மையம்

இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்…. வானிலை ஆய்வு மையம்

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

12.4.2023 முதல் 13.4.2023  ஆகிய இரு நாட்களிலும்  தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். மேற்கண்ட இரு நாட்களும்  தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *