ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவ தேவி கட்ராவிலிருந்து திருநெல்வேலி செல்லும் வாராந்திர ரயிலில் சுகாதாரக் கேடு – பயணிகள் முகம் சுழிக்கும் வகையில் இருப்பதாக கரூர் பயணி வெளியிட்ட வீடியோ வைராகி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவதேவி கட்ராவிலிருந்து, பல்வேறு மாநிலங்களை கடந்து, திருநெல்வேலி செல்லும் ரயில் நேற்று காலை 10.30 மணியளவில் கரூர் ரயில் நிலையம் வந்தடைந்தது. அதில் திருச்சி வரை முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணி ஒருவர் பயணம் செய்துள்ளார்.
அந்த பெட்டியிலிருந்து முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிக்கு செல்லும் வழியில் தண்ணீர், குளிர்பானம் காலி பாட்டில்கள், பிஸ்கட், தின்பண்டகளின் கவர்கள் குப்பை மேடு போல் குவிந்து கிடந்துள்ளன.
மேலும், கழிவறையில் தண்ணீர் வராததால் வாஸ்பேசினில் தண்ணீர் தேங்கியும், அதில் காலி தண்ணீர் பாட்டில்கள் சுகாதார கேடு ஏற்படும் வகையில் கிடந்துள்ளன. இதனை வீடியோ மற்றும் போட்டோவாக எடுத்த ரயில் பயணி ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.