திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையில் ஏட்டாக பணியாற்றியவர் ஜே. மஞ்சுநாத் (40) புதுக்கோட்டையை சேர்ந்த இவர் திருச்சி உடையான்பட்டியில் குடும்பத்தோடு வசித்து வந்தார். நேற்று மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை இவருக்கு திருச்சி ஜங்ஷன் 2வது பிளாட்பாரத்தில் பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.
அப்போது கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அந்த ரயிலில் மஞ்சுநாத் திடீரென பாய்ந்தார். இதில் உடல் துண்டாகி அவர் அந்த இடத்திலேயே இறந்தார். அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவில்லை. போலீசார் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மஞ்சுநாத் முடிவுக்கு காரணம், குடும்ப பிரச்னையா, பணி அழுத்தமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கிறார்கள். இன்று மாலை மஞ்சுநாத் உடல் தகனம் ஓயாமரியில் நடக்கிறது.