Skip to content
Home » ”தலைவர் 170” படப்பிடிப்பின் போது ரித்திகா சிங்கிற்கு காயம்…

”தலைவர் 170” படப்பிடிப்பின் போது ரித்திகா சிங்கிற்கு காயம்…

  • by Authour

தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் எதிர்பாராத விதமாக நடிகை ரித்திகா சிங்கிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. அது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சிக்ஸ் பேக்ஸ் முயற்சியில் ரித்திகா.. வைரலாகும் புகைப்படம் | Tamil cinema ritika singh post goes viral

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170வது படத்தை ஞானவேல் ராஜா இயக்கி வருகிறார். அந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை ரித்திகா சிங் நடிக்கிறார். விறுவிறுப்பாக நடந்து வரும் படத்தின் படப்பிடிப்பில் நடிக்கும் போது எதிர்பாராத விதமாக கண்ணாடிகள் உடைந்து ரித்திகாவுக்கு கடுமையாக கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது.

photo

இது குறித்து கூறிய அவர் “ இதை பார்க்கும் போது ஒநாய்களுடன் சண்டை போட்டது போல் உள்ளது, படப்பிடிப்பு தளத்தில் என்னை எச்சரித்துக்கொண்டே இருந்தார்கள். கண்ணாடிகள்  இருக்கிறது என கூறினார்கள் ஆனால் நான் தான்… சில சமயங்களில் நம்மை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்பட்டை இழந்து கண்ணாடிகள் மீது மோதிவிட்டேன். விரைவில் குணமாகி மீண்டும் படப்பிடிப்புக்கு வருவேன்.” என பதிவிட்டுள்ளார். அவரது கையில் ரத்தகாயங்கள் அதிகமாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *