தஞ்சாவூர் அருகே வல்லம் பிரிவு சாலை பகுதியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் திருச்சி ராம்ஜி நகர், மில் நகர் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் அருண் (28), கேரளா மாநிலம் பாலக்காடு, சூரக்கோடு பகுதியை சேர்ந்த பத்மநாபன் என்பவரின் மகன் சந்தோஷ் (45) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் விற்பனைக்காக 8.500 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 85 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.