சென்னை, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இதை கண்டித்தும், இது தொடர்பாகவும் வி சப்போர்ட் செந்தில் பாலாஜி (#We_Support_Senthilbalaji) என்ற பெயரில் சமூகவலைதளங்களில் ஹேஸ்டிராக் டிரெண்டிங் ஆகி வருகிறது.
அதில், அமைச்சர் செந்தில் பாலாஜி இருக்கும் வரை கோவை மற்றும் கொங்கு பகுதியில் மீண்டும் அதிமுக தலைதூக்க முடியாது. அண்ணாமலை குறைந்த பட்சம் எம்எல்ஏ ஆக கூட வாய்ப்பில்லை என்பதால் ஒன்றிய அரசு தனது ஏவல் படை மூலம் மீண்டும் மீண்டும் அமைச்சரை முடக்கும் வேலையில் இறங்கி உள்ளது. இந்த உருட்டல், மிரட்டல் எல்லாம் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் வேகாது. அனைத்தையும் அடித்து நொறுக்கி தகர்த்தெறிந்து விட்டு வெற்றி நடை போடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு ஹேஸ்டாக் வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.