திருச்சி அல்லித்துறையில் பொதுமக்கள் இன்று குடும்பம் குடும்பமாக பொங்கல் பண்டிகை கொண்டாடினர். குறிப்பாக தங்கள் இல்லம் முன்பு வண்ண கோலங்கள் வரைந்து, புத்தாடைகள் அணிந்து, மண் பானை பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.பொங்கல் பொங்கி வரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பொங்கலோ பொங்கல் என தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சூரிய பகவானை வழிபட்டனர். சமீபகாலமாக தமிழ்நாடு என்ற சொல் டிரெண்டிங் ஆகி வருகிறது. இதை குறிக்கும் விதமாகவும், தமிழ்நாட்டை பெருமைப்படுத்தும் விதமாகவும் பெரும்பாலான வீடுகளின் வாசல்களில் தமிழ்நாடு வாழ்க என்று குறிப்பிட்டு கோலம் வரைந்திருந்தனர்.
Tags:டிரெண்டிங்