மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா, 600 கிலோ மாம்பழங்களை பரிசாக அனுப்பி உள்ளார். தூதரக முயற்சிகளின் ஒரு பகுதியாக ஹிம்சாகர் மற்றும் லாங்ரா வகைகளை உள்ளடக்கிய 600 மாம்பழங்கள் மம்தா பானர்ஜிக்கு வங்கதேச பிரதமர் அனுப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வடகிழக்கு மாநில முதல்-மந்திரிகள் அனைவருக்கும் மாம்பழங்களை ஷேக் ஹசீனா அனுப்பி உள்ளார். கடந்த ஆண்டு பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்காளம், திரிபுரா, அசாம் ஆகிய மாநில முதல்வர்களுக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா மாம்பழங்களை அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
