அரியானா மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த 5ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. இன்ற வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அனைத்து கருத்து கணிப்புகளும் அங்கு காங்கிரஸ் ஆட்சி அமையும் என கூறி இருந்தது. இன்று காலையில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியபோது, 45 தொகுதிகளுக்கு மேல் காங். முன்னணியில் இருந்தது.
காலை 10 மணி நிலவரப்படி நிலைமை மாறியது. காங்கிரஸ் பின்னடைவு சந்தித்தது. அதாவது தனித்து ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் 38 இடங்களில் தான் முன்னிலை பெற்றிருந்தது. அதே நேரத்தில் பாஜக 50 இடங்களில் முன்னிலையில் இருந்தது.
அரியானாவில் கடந்த 10 வருடங்களாக பாஜக ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.