அரியானா, ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் நடந்தது. காஷ்மீரில் செப்., 18, 25 மற்றும் அக்., 1ம் தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்தது. அரியானாவில் அக்டோபர் 1ம் தேதி ஒரே கட்டமாக 90 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது.
இந்த இரு மாநிலங்களிலும் பதிவான ஓட்டு எண்ணிக்கை நாளை காலை தொடங்குகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி இரு மாநிலங்களிலும் காங்கிரசே ஆட்சி அமைக்கும். அரியானாவில் தனித்தும், ஜம்மு காஷ்மீரில் கூட்டணி ஆட்சியும் அமைக்க வாய்ப்பு இருப்பதாக பெரும்பாலான கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஜம்மு – காஷ்மீரில் தொங்கு சட்ட சபை அமைவதற்கான வாய்ப்பும் ஏற்படலாம் என சில கணிப்புகள் கூறுகின்றன.அரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் முதல்வராக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பரவலாக கருத்துக்கள் எழுந்துள்ளன. ஜம்மு காஷ்மீாில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்பட்டால் உமர் அப்துல்லா முதல்வராக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.