இந்திய தேசிய லோக் தள கட்சி தலைவரும் அரியானா முன்னாள் முதல்-மந்திரியுமான ஓம் பிரகாஷ் சவுதாலா (வயது 89) மாரடைப்பால் காலமானார். இவர் முன்னாள் துணை பிரதமர் , அரியானா மாநில முன்னாள் முதல்-மந்திரி தேவிலாலின் மகன்களில் ஒருவர் சவுதாலா.
ஓம் பிரகாஷ் சவுதாலா 1989 முதல் 2005 வரை 4 முறை முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார்.இதுவரை 7 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். இவர் வயது மூப்பு காரணமாகத் தீவிர அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார். இந்தநிலையில், நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த சவுதலா இன்று (வெள்ளிக்கிழமை) கர்னாலில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனை கொண்டு செல்வதற்குள் அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சவுதலா ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பான வழக்கில் 10 ஆண்டு காலம் சிறை தண்டனைக்கு ஆளானவர். அந்த வழக்கில் ஜாமீனில் வெளியே இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.