Skip to content
Home » சிறையில் இருந்து வந்த ஹரி நாடார் மீண்டு கைது..

சிறையில் இருந்து வந்த ஹரி நாடார் மீண்டு கைது..

  • by Authour

கடந்த 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் நாடார் சமுதாயம் சார்பாக,  சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு 37,726 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தவரும், தமிழகத்தில் சுயேட்சை வேட்பாளர்களில் அதிக அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்த வேட்பாளருமான ஹரி நாடாரை பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2021 மே மாதம் ஒரு குற்ற வழக்கில் கைது செய்து பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைத்தனர்.

அப்போதே கேரளாவைச் சேர்ந்த இஸ்மாயில் பரக்கத் என்ற தொழிலதிபர் ஹரி நாடார் மீது மோசடி புகார் ஒன்றை தமிழக  காவல்துறையினரிடம் வழங்கியிருந்தார். அவர் புகார் அளித்து 22 மாதங்கள் ஆகியுள்ள இந்நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB)  போலீசார் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கடந்த 22 மாதங்களாக விசாரணை சிறைவாசியாக இருந்து வரும் ஹரி நாடாரை இன்று மீண்டும் கைது செய்தனர். சென்னை அழைத்து வரப்படும் ஹரிநாடார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை சிறையில் அடைக்கப்படுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *