உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா- வங்கதேசம் இடையேயான போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் செய்தது. 9வது ஓவரை இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா வீசினார். அவர் வீசிய 3வது பால் அவருக்கு நேராக திரும்பி வந்தது. அதை காலால் தடுக்க முயன்றபோது பாண்டியா தவறி விழுந்து விட்டார். உடனடியாக அவருக்கு மைதானத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரால் எழுந்து எஞ்சிய 3 பந்துகளை வீச முடியவில்லை. எனவே அவர் வெளியேறினார். அந்த 3 பந்துகளை கோலி வீசினார். பாண்டியாவுக்கு பதில் சூரியகுமார் யாதவ் பீல்டிங் செய்தார்.
வங்க தேச அணி23.1 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழந்து119 ரன்கள் எடுத்திருந்நதது. சமீம்(51), கேப்டன் நஜ்முல்(8) ரன்கள் எடுத்து அவுட் ஆகி இருந்தனர். லிட்டன் தாஸ், மெகிதிஹசன் ஆடிக்கொண்டிருந்தனர். அதன் பின்னர் ஹசன் 3 ரன்னில் அவுட் ஆனார். 25 ஓவரில் 3 விக்கெட்டுக்கு வங்கதேசம் 129 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து அந்த அணி நிதானமாக ஆடிக்கொண்டிருந்தது.