2023 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் சென்னை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மக்கள் குடும்பத்துடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். சர்ச்களில் நள்ளிரவு பிராத்தனைகளில் கிறிஸ்துவர்களும்
அதிகாலை முதலேயே கோவில்களில் இந்துக்களும் வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். நள்ளிரவு கொண்டாடங்களுக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்றாலும் திருச்சி கோர்ட் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலை அண்ணாநகர் செல்லும் ரோட்டில் டூவீலர்களில் இளைஞர்கள் அதிக சத்ததுடன் உலாவந்தனர். அவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர்..
