அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். கைத்தறி துணி உற்பத்தி மீதான ஜிஎஸ்டி வரியை முற்றிலும் நீக்க வேண்டும், கைத்தறி நெசவாளர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.5000 வழங்க வேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்ட்ட கைத்தறி நெசவாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.10000 நிவாரண நிதி வழங்க வேண்டும்
ஆண்டுகளுக்கு ஒரு முறை இயற்கை சீற்ற நிவாரணம் மற்றும் மழைக்கால நிவாரணமாக ரூ5000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பட்டம் நடைபெற்றது. இதில் கைத்தறி நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.