Skip to content

பொள்ளாச்சியில் மாற்றுதிறனாளிகள் மறியல் போராட்டம்…

கோவை, பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தமிழ்நாடு தழுவிய மறியல் அறப்போராட்டம் நடைபெற்றது.இதில்
ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் மாற்றுத்திறனாளிகளின் ஊனத்திற்கு 6000 ரூபாயும் ,கடும் ஊனத்திற்கு 10,000 ரூபாய் வழங்கிட வேண்டும் எனவும் 100 நாள் வேலையில் 100 நாள் வேலை வாய்ப்பும், நான்கு மணி நேர இலகுவான வேலையும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.