பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று சென்னையில் அளித்த பேட்டி:
பள்ளிகளில் டிசம்பர் 9ம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்குவதாக இருந்தது. பல மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நிலைமை சீரடையாவிட்டால் அரையாண்டு தேர்வை ஜனவரிக்கு மாற்றிக்கொள்ளலாம். தேர்வு மாற்றத்தையும், புதிய தேர்வு தேதியையும் பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம். இதுபோல 2ம் தேதி தொடங்க இருந்த செய்முறை தேர்வு ஜனவரி முதல் வாரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.