Skip to content
Home » அழகு சாதனவியல்- சிகை அலங்கார பயிற்சி….. திருச்சி கலெக்டர் தகவல்…

அழகு சாதனவியல்- சிகை அலங்கார பயிற்சி….. திருச்சி கலெக்டர் தகவல்…

  • by Senthil

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் போன்ற பயிற்சி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சார்ந்த மாணாக்கர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதல் தொடர்ச்சியாக தற்போது சென்னை மகா அழகு கலை பயிற்சி நிலையத்தின் (Maha Family Salon and Spa international Training Academy) மூலமாக புகழ் பெற்ற அழகு நிலையங்களில் பணிபுரியவும் மற்றும் சுய தொழில் தொடங்குவதற்கும் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் (Cosmetology & Hair Dressing) பயிற்சியிளை தாட்கோ சார்பாக அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில் ஆதிதிராவிடர் / பழங்குடியின சார்ந்த பத்தாம் வகுப்பு படித்த 18 வயது முதல் 30 ன்பது வரை உள்ள மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலம். இப்பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள் ஆகும், மேலும் சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும். வசதியும் இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் மாணக்கள்களுக்கு
இந்திய தேசிய திறன் மேம்யாடு NSDI (National Skill Development Of India) யால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும், இப்பயிற்சியினை பெற்றவர்கள் தனியார் அழகு நிலையங்களில் (Gayathri Hair & Skin Salon, RKS Beauty Parlour, Naturals and body craft) பணிபுரிய 100% வேலை வாய்ப்பு அளிக்க நடடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் வெறிகரமாக முடிக்கும் மாணாக்கர்களுக்கு ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.15,000/- முதல் ரூ20,000/- வரைபெறலாம் மற்றும் சுய வேலைவாய்ப்பு நிட்டத்தின் கீழ் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்ய தாட்கோ மூலமாக ரூ.2.25 இலட்சம் மானியத்துடன் கூடிய ரூ.10 இலட்சம் கடன் உதவி வழங்கப்படும்.

இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்
மா.பிரதீப் குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!