மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா MLA அவர்களை தவறான கருத்து மூலம் விமர்சித்த பாஜக ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா மீது திருச்சியில் மணப்பாறை, உறையூர், தில்லை நகர் எடமலைபட்டி புதூர் ஆகிய காவல் நிலையங்களில் மாவட்ட தலைவர் பைஸ் அகமது MC, தலைமையில் தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா, மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலையில் புகார் அளிக்கப்பட்டது.
தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட துணை தலைவர், மாவட்ட துணை செயலாளர்கள், பகுதி நிர்வாகிகள், அணிகளின் செயலாளர்கள், வார்டு, கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.