Skip to content

“எச்.ராஜாவுக்கு ஒரே பதில்.. வாய்ப்பில்ல ராஜா…. சீமான். பதிலடி..

புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்தார்.. எச். ராஜா எத்தனை முறை அழைத்தாலும் வாய்ப்பில்லை என்பதுதான் எனது பதில்,நட்பு என்பது வேறு அரசியல் நிலைப்பாடு என்பது வேறு,அவர் என்னை அழைப்பது எங்களது வளர்ச்சியை காட்டுகிறது,

தமிழ் தேசியம் தோற்றுவிடும் என்று திருமாவளவன் சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை,தமிழ் தேசியம் குறித்து திருமாவளவன் அவர்களிடம் இருந்துதான் நாங்கள் கற்றுக் கொண்டோம் அவரது மாணவர்கள் நாங்கள்,எப்போதும் ஆசிரியர்கள் ஓடி ஜெயிக்க முடியாது,பயிற்சி அளிக்கும் மாணவர்கள் தான் ஜெயிக்க முடியும் நாங்கள் ஜெயித்துக் காட்டுவோம் பொருத்து இருந்து பார்க்கட்டும்.

தமிழக அரசிடம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கொடுங்கள் என்று யாரும் கேட்கவில்லை,அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை என்று தேர்தலுக்கு முன்பாக அறிவித்த அரசு ஏன் தற்போது விதிமுறைகளை விதிக்கிறது, அப்படி என்றால் பிச்சைக்காரனாக இருந்தால் தான் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற நிலைக்கு அரசு தள்ளிவிட்டது,நல்லா இருந்தால் நாங்கள் ஏன் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை உங்களிடம் பெற போகிறோம்,

டிஐஜி விஜயகுமார் மன அழுத்தத்தின் காரணமாக தான் உயிரிழந்து உள்ளார் அவர் எனக்கு நன்கு அறிமுகமானவர்,கடந்த ஆறு மாத காலமாக அவர் பணிச்சுமையின் காரணமாக மன அழுத்தத்தில் இருந்து உள்ளார், 6 மாத விடுமுறை கேட்டார் கொடுக்கவில்லை அந்த அழுத்தத்தின் காரணமாக தான் அவர் உயிரிழந்து உள்ளார் இனிமேல் இது போன்ற ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க காவல்துறையினருக்கு சுழற்சி முறையில் விடுமுறை அளிக்க வேண்டும்,

பேனா சிலை சென்னை கடற்கரையில் அமைக்கப்பட்டால் அதை கண்டிப்பாக உடைப்போம் அதில் எந்த மாற்றுக் கருத்தும் எனக்கு இல்லை,

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கும் அவர்களுக்கான குடியுரிமையை வழங்குவதற்கும் இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கச்சத்தீவை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆளுநர் விவகாரமும் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரமும் ஒரு பிரச்சனையிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காக ஏற்படுத்தப்பட்டு வருகிறது

கலைஞருக்கு ஒரு பராசக்தி என்றால் மாரி செல்வராஜுக்கு ஒரு மாமன்னர் என்று தான் கூற வேண்டும்,இதில் உதயநிதி எங்கிருந்து வருகிறார்,இது போன்ற பட்டியல் இன சமூக மக்களின் பிரச்சினைகளை பேசும் படங்கள் வரவேண்டும் வருவதை நான் வரவேற்கிறேன். இதே போல சமூக நீதி குறித்து இயக்குளை பா.ரஞ்சித் கூறிய கருத்துக்களையும் நான் வரவேற்கிறேன்,

கிருஷ்ணசாமி இப்போது இது போன்ற படங்கள் வரக்கூடாது பேசுவதற்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது, தேவர் மகன் விருமாண்டி சண்டியர் படங்கள் வரும்போது அவர் எவ்வாறு எதிர்ப்புகளை தெரிவித்தார், அவர் பேசுவதெல்லாம் சும்மா தேவையற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *