தமிழ்நாடு பாஜக தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா மீது, பெண்களைப்பற்றி தரக்குறைவாக பேசியது தொடர்பான வழக்கு உள்ளது. இந்த வழக்குக்கு தடை கோரி எச். ராஜா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, பொறுப்போடும், முன்னெச்சரிக்கையோடும் பேச வேண்டும். படித்த நீங்கள் இப்படி பேசலாமா? என்றும் கேட்டார்.
