பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பயிலரங்கம் கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாநில பொறுப்பாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட தேசிய, மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து மாநில ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா
பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ராஜா கூறியதாவது:
பாஜகவின் உட்கட்சி தேர்தல் தொடர்பான கருத்தரங்கள் நடைபெற்றது. கிளை தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது அது 30 தேதி வரை நடக்கும், டிசம்பர் 1 முதல் நகர், ஒன்றிய கமிட்டிகளுக்கான தேர்தல் நடக்கும், டிசம்பர் 16 முதல் 30 வரை மாவட்ட தலைவர் உள்ளிட்ட கமிட்டிக்கான தேர்தல் நடக்கும், ஜனவரி முதல் வாரத்தில் மாநில தேர்தல், ஜனவரி 15ம் தேதிக்குள் தேசிய தலைவர் தேந்தெடுக்கப்படுவார்கள். தை பிறக்கும் போது பாஜகவின் தேசிய தலைவர் கமிட்டி வரும். அதற்கான பயிலரங்கள் தான் இங்கு நடந்து இருக்கிறது.
சபரிமலைக்கு மாலை அணிவித்து பக்தர்கள் சென்று கொண்டிருக்கும் இந்த சமயத்தில் ஐயப்பனை பற்றி கேலியும், கிண்டலுமாக இசைவாணி, இயக்குநர் ரஞ்சித் போன்றவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மிக மோசமான சூழ்நிலை வந்து கொண்டிருக்கிறது.
ஏன் இந்த இசை வாணியை கைது செய்யவில்லை, காவல் துறையே ஹிந்து விரோதமாக இருக்கிறதா என்று சந்தேகம் வருகிறது. காவல் துறை உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அதானிக்கு எதிராக அமெரிக்க கோர்டில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கோர்ட் என்ன சொல்லுதோ அதற்கு கட்டுப்பட்டவர் அதானி, பிஜேபியை சம்மந்தப்படுத்தி, பிரதமர் வாயை திறக்கவில்லை என்பது தேவையற்றது. அதானியே குற்றசாட்டுக்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்று கூறி விட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.