Skip to content

தஞ்சையில் இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய ”ஜிம் மாஸ்டர்” கைது…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த 31 வயது பட்டதாரி பெண். விவகாரத்து பெற்ற பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கும்பகோணம் மகாமக குளம் அருகே உள்ள மசில் பேக்டரி ஜிம்மில், பயிற்சிக்காக கடந்த ஆண்டு இளம் பெண் சேர்ந்துள்ளார்.

கடந்த 2024ம் ஆண்டு மார்ச்.15ம் தேதி, ஜிம் உரிமையாளரான சாக்கோட்டை பகுதியை சேர்ந்த பத்மகுமரன்(27) . . பட்டதாரி பெண்ணிடம், திருமணம் செய்து கொள்ளுவதாக கூறி பழகியுள்ளார். மேலும், புதியதாக ஒரு ஜிம் திறக்க வேண்டும். அதற்கு பணம் வேண்டும் என பட்டதாரி பெண்ணிடம், பத்மகுமரன் கேட்டுள்ளார்.

இதை நம்பி பட்டதாரி பெண்ணும், தனது நகைகளை அடகு வைத்து, 38 லட்சம் ரூபாயை, பத்மகுமரனின் வங்கி கணக்கில் அனுப்பியுள்ளனர். இந்த பணத்தை கொண்டு, பத்குமரன் செட்டிமண்டபம் பகுதியில் புதிய ஜிம் ஒன்றை திறந்தார்.

கடந்த, அக்டோபர் மாதம், மகாமக குளம் ஜிம்மில் இருந்த பத்மகுமரனிடம், இளம் பெண் திருமணம் தொடர்பாக கேட்ட போது, தனது தாயிடம் கேட்டு, உன்னை தான் திருமணம செய்துக்கொள்ளுவேன் என கூறி, அந்த இளம் பெண்ணிடம், பலமுறை உடலுறவு வைத்துக் கொண்டதால், இளம் பெண் கர்ப்பமானார்.

இதன்பிறகு, அந்த பெண்ணிடம், பத்மகுமரன் பேசுவதை நிறுத்தி விட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த இளம் பெண் பத்மகுமரனின் தாய் புனிதாதேவியை சந்தித்து, நடந்த விபரங்களை கூறியுள்ளார். அப்போது, புனிதாதேவி, என் மகன் உன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பி தருவான். நீ கருவை கலைத்து விடு என மிரட்டியுள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட இளம் பெண், கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசில், புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் நடத்திய விசாரணைக்கு பிறகு, பத்மகுமரன், இளம் பெண்ணிடம் வாங்கிய 38 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி அளித்துள்ளார். மேலும், இளம் பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளவதாக பத்மகுமரன் அளித்து உறுதியின் பெயரில், இளம்பெண் வழக்கை வாபஸ் பெற்றார்.

கடந்த பிப்.23ம் தேதி, சுவாமிமலை முருகன் கோவிலுக்கு இளம் பெண்ணை, திருமணம் செய்துக்கொள்ளுவதாக கூறி வரவழைத்தார். அங்கு, கர்ப்பத்தை கலைத்து விட்டு, இல்லையென்றால், கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த இளம் பெண் துாக்கமாத்திரையை சாப்பிட்டுள்ளார். இதையறிந்த அவரது தந்தை இளம் பெண்ணை, கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருவிடைமருதுார் அனைத்து மகளிர் போலீசார், விசாரணை நடத்தினர். அப்போது, இளம் பெண் பத்மகுரன், அவரது தாய் புனிதா தேவி மீது புகார் அளித்தார்.

புகாரின் பேரில், நேற்றுமுன்தினம் பத்குமரனை திருவிடைமருதுார் மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!